Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

டிமானிடைசேஷன் அல்லது பணம் மதிப்பைழப்பு செய்தல் என்றால் என்ன ?

கேஷ் லெஸ் இந்தியா உருவாக வேண்டும் என்று மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்ட  நிலையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு அனைத்து வர்த்தகர்களும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் நடைபெற வேண்டும் என்ற அரசின் கனவு கொஞ்சம் பின்னடைவுகளை சந்தித்தாலும்,  அந்த கனவு சற்றே மாறி லெஸ் கேஷ் இந்தியாவாக மாற வழி வகுத்தது.

pn1

பெரும் மதிப்பு கொண்ட கரென்சிகள் தடை செய்யப்பட்ட பின்பு மிகுந்த பிரச்சனைகளுக்கும் மக்கள் பட்ட அல்லல்களுக்கும் பிறகு இப்போது கொஞ்சம் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஆம், மத்திய அரசின் மிக பெரிய நடவடிக்கையாக  டீமோனிடைசேஷனிற்கு பிறகு அரசு மக்களின் பண பரிவர்த்தனைகள் மீது பயங்கர நாட்டமும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்து உள்ளது. கருப்பு பணம் ஒழித்தலில் மிக பெரிய நடவடிக்கையாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. முழுக்க முழுக்க கருப்பு பணம் ஒழிப்பதில் அரசு ஈடுபடுத்தலின் ஒரு முக்கிய அம்சமாக பணமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்கப் படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை என்றால் என்ன ?

pn2

பணமில்லா பரிவர்த்தனையில் மக்கள் அதிகம் ஈடுபட ஊக்குவிக்கும் அரசு அதற்குண்டான பல முறைகளையும் திட்டங்களையும், வங்கிகளின் உதவியுடன் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. டெபிட் கார்டுகள் , க்ரெடிட் கார்டுகள், கூப்பன்கள், ஆன்லைன் டிரான்ஸாக்ஷன்கள் மற்றும் வித விதமான பண பரிவர்த்தனை செய்யக்கூடிய எலெக்ட்ரோனிக் இயந்திரங்கள் என எங்கு திரும்பினாலும் சுவைப்பிங் மெஷின்ஸ்  பெருகி வருகிறது.

இங்கு எங்களின் பே நியர் டிவைஸ் பனமற்ற  பரிவர்த்தனைக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். மிக சுலபமாக இயக்கக்கூடிய கருவி இது.  பண பட்டுவாடா,  வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துதல், போன்றவற்றிற்கு பே நியர் நம் வேலையை மிகவும் சுலபம் ஆக்குகிறது

பே நியர் உங்கள் வர்த்தகத்திற்கு எப்படி உதவும் ?

வர்தகதாரர்கள், வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர், பெட்டி கடை வைத்திருப்பவர் என்று நம் சேவையின் பலன் பெறுவோர்  பட்டியல் நீளுகிறது. மிகவும் எளிய முறையில் இயக்கப்படுவதும், இந்திய பிராந்திய பன்மொழி வழி இயக்கமுறையுமே இந்த கருவியின் மிகப்பெரிய வெற்றி ஆகும்.

pn1

இந்த கருவி தற்போது இந்தியாவின் 22  மாநிலங்களிலும், உலக சந்தையில் 2 நாடுகளிலும் வெற்றி நடை போட்டு வருகிறது. இது ஒரு சிறிய ஏ.டி, எம். ஆகவும் இயங்குகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. குக்கிராமங்களில் வங்கி ஏ, டி, எம். கள் மிக தூரத்திலோ, ஊருக்கு ஒன்றோ அல்லது பல மைல்கள் நடந்தோ அல்லது வாகனங்களிலோ செல்ல வேண்டும் என்ற நிலை இருக்குமேயானால்  நம் கருவி ஊருக்குள் ஒரு கடைக்காரர் வைத்திருப்பதன் மூலம் அவர் லாபம் பெறுவதுடன், ஏ, டி, எம், செல்ல முடியாத வயாதோனோருக்கு வங்கியின் டெபிட் கார்டுகள் சுவைப் செய்து கடையிலேயே தங்களின் வங்கியில் உள்ள பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதை நேர விரயத்தை தடுக்க நகரங்களிலும் வங்கி வாடிக்கையாளர்கள் பயன் படுத்த முடியும்.

pn7

இதை வாங்கி பயன்படுத்தும் வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவங்களுக்கு பே நியர் அனைத்து விதமான உதவிகள் மற்றும் பயிற்சிகள் மற்றும் சேவைகளை இடையறாது அளிக்கிறது.

பே நியர் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தன்னுடைய அளப்பரிய சேவையை வழங்கி வருகிறது. எங்களின் வாடிக்கைதாரர்கள் சில்லறை வர்த்தகம் துவங்கி, பெரிய பெரிய உணவகங்கள், விருந்தோம்பல் துறை முதற்கொண்டு மருத்துவம், உடல்நலம் அழகு நிலையங்கள் மற்றும், சுற்றுலா மற்றும் பயணத்துறைகள் வரை என இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் சேவையில் பத்து ஆண்டுகளுக்கும்.

pn6

பண பரிவர்த்தனை அதிகமாக பயணித்துக் கொண்டிருக்கும் பே நியர் டிஜிட்டல் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வரம் ஆகும். இது உபயோகிக்க எளியது என்பதுடன்  விலையும் மிக குறைவு . மிகவும் எளிய வியாபாரிகளும் வாங்க கூடிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடாத தக்கது.

Contact 9841836528 to Advertise here