Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

written by சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

1458624214_t51fmo11ivqfdev7hol8nvm580How-to-check-Adulteration-in-Milk

நாட்டில் பசு மாடுகளே குறைச்சலாக இருக்கும் போது பால் உற்பத்தி மட்டும் எப்படி அதிகமாக இருக்கும்? எனவும் இன்று “பொதுமக்கள் குடிக்கும் பால் பாலே அல்ல” எனவும், 20%பாலில் 50%சோயா பால் 30%தண்ணீர் கலந்து 100% பாலாக மாற்றி அதனை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அதனை சரியாக சோதனை செய்யாமல் பால் எனும் பெயரில் பாக்கெட்டில் அடைத்து பால் நிறுவனங்கள் நமக்கு விற்பனை செய்கின்றன எனவும் இன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன. “பால் கலப்படம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பாதீர்கள்”.

சுமார் 17% பால் உற்பத்தியை தன்னகத்தே கொண்டு உலக பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதென்றால் மாடுகள் இல்லாமல் பால் உற்பத்தி என்பது சாத்தியமா? என்பதை அனைவரும் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த வாரம் “பால் கலப்படம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பாதீர்கள்” என அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் முன் வைத்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன்.

அன்பிற்கினிய நண்பர்களே பால் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் இடத்தில் பாலில் கலப்படம் நடைபெறுவது என்பது தற்போது சாத்தியம் கிடையாது. ஏனெனில் நான் முன்பே கூறியது போல இன்று பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்ற பாலினை கொள்முதல் செய்கின்ற பால் நிறுவனங்கள் அந்த பாலில் உள்ள கொழுப்பு சத்து, திடசத்துக்களின் அளவை மட்டும் சோதிப்பதில்லை. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தாங்கள் கொள்முதல் செய்கின்ற “பால் பழைய பாலா? புதிய பாலா?”

அதில் “பாக்டீரியா என்று சொல்லப்படும் கிருமிகள் இருக்கிறதா?” பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனப் பொருட்கள் ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? போன்ற கடுமையான தரப் பரிசோதனைகளுக்குப் பிறகே பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அனைத்து பால் நிறுவனங்களும் பாலினை கொள்முதல் செய்கின்றன. அவ்வாறு கடுமையான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாலில் திருப்தி இல்லாத போது அந்த பாலை பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதில்லை. உண்மை நிலை இப்படி இருக்கும் போது 20%பாலில் 50%சோயா பால் 30%தண்ணீர் கலந்து 100% பாலாக மாற்றி பால் உற்பத்தியாளர்கள் அனுப்புவதாகவும் அதனை சரியான பரிசோதனை உபகரணங்கள் இல்லாமல் சரியாக சோதிப்பதில்லை என்பது “முழுப் பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைப்பதற்கு சமமாகும்.”

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பால் கலப்பட வழக்கில் மத்திய அரசு பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனப் பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையை ஒப்புதல் வாக்குமூலமாக 2012ம் ஆண்டிலேயே தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“யூரியா”

மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ள “யூரியா” கலப்படமானது பால் வெள்ளை நிறமாகவே இருப்பதற்காக கலப்படம் செய்வதாகும். பாலே வெள்ளை தானே அதற்கு எதற்காக “யூரியா” கலக்க வேண்டும் என சந்தேகம் எழலாம். பசும்பால் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக உள்ள பாலினை காய்ச்ச, காய்ச்ச மஞ்சள் நிறமாக பால் மாறத் தொடங்கும். எனவே எவ்வளவு நேரம் பாலினை காய்ச்சினாலும் பால் வெண்மையாகவே இருப்பதற்காக “யூரியா” கலக்கப்படுகிறது.

“பார்மாலின்”

இது இறந்து போன மனித உடல்களை பராமரிக்க பயன்படுத்தும் ரசாயனம் ஆகும். இதை பாலில் கலப்படம் செய்வதால் பால் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்காக “பார்மாலின்” எனும் ரசாயனம் கலக்கப்படுகிறது.

“டிடர்ஜென்ட் ஆயில் & வாஷிங் சோடா”

நுரை என்பது பாலில் இயற்கையாகவே குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும். ஆனால் வணிக ரீதியாக பாலினை பயன்படுத்தி ஆதாயம் அடைய நிறைய நுரை வர வேண்டும் என்பதற்காக இந்த “டிடர்ஜென்ட் ஆயில் & வாஷிங் சோடா” கலப்படம் செய்யப்படுகிறது.

“ஜவ்வரிசி & சோயா”

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலினை கொள்முதல் செய்த பிறகு அதில் உள்ள கொழுப்பு சத்தினை நீக்கி விட்டால் பால் வெறும் தண்ணீரைப் போன்று தான் இருக்கும். எனவே பாலை திடமாக்குவதற்காக “ஜவ்வரிசி & சோயா” கலக்கப்படுகிறது.

“குளுக்கோஸ் & சர்க்கரை”

மாட்டின் மடியில் இருந்து கறக்கப்பட்ட பாலில் இயற்கையாகவே சற்று இனிப்பு இருக்கும். கொழுப்பு சத்தினை நீக்கிய பால் வெறும் தண்ணீராக மட்டுமல்ல வெறும் சக்கையாகத் தான் இருக்கும். அவ்வாறான பாலினை திடமாக்குவதற்காக “ஜவ்வரிசி & சோயா” கலக்கப்படும் போது அதற்கு செரிவூட்டுவதற்காக “குளுக்கோஸ் & சர்க்கரை” கலப்படம் செய்யப்படுகிறது.

இந்த யூரியா, பார்மாலின், டிடர்ஜென்ட் ஆயில், வாஷிங் சோடா போன்ற உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனப் பொருட்களையும், ஜவ்வரிசி, சோயா, குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இயற்கை பொருட்களையும் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளால் பாலில் கலப்படம் செய்து பால் நிறுவனங்களுக்கு வழங்க முடியுமா? அவ்வாறு கலப்படம் செய்த பாலினை வழங்கினால் பால் நிறுவனங்களில் உள்ள கடுமையான தரக்கட்டுப்பாட்டு அளவிலேயே தடுக்கப்படுமா? இல்லையா?

சரி இந்த பால் கலப்படத்தை நாமே கண்டறிய முடியாதா? என கேள்வி எழுப்பலாம். நம்மால் பாலில் கலப்படம் இருக்கிறதா? என்பதை எளிய முறையில் கண்டறியலாம் என்றாலும் கூட துள்ளியமாக கண்டறிவது என்பது சாத்தியமில்லாதது. எனவே உணவு பொருள் ஆய்வகங்களில் கொடுத்து தான் பாலில் கலப்படம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நம்மால் துள்ளியமாக கண்டறிய இயலும். அவ்வாறு பாலில் கலப்படம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஆய்வுக் கட்டணமாக ஒரு பால் பாக்கெட்டிற்கு 6ஆயிரம் ரூபாய் நாம் செலுத்த வேண்டும்.

 இன்று நமது தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.5கோடி லிட்டர் பால் விற்பனை நடைபெறுகிறது. அதில் ஆவின் நிறுவனத்தை சேர்த்து சுமார் 40க்கும் மேற்பட்ட தமிழக பால் நிறுவனங்களும், சுமார் 25க்கும் மேற்பட்ட அண்டை மாநில பால் நிறுவனங்களும் இணைந்து தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்கின்றன. அதில் ஒவ்வொரு பால் நிறுவனங்களும் தலா 4வகையான பாலினை விற்பனை செய்கின்ற போது அனைத்து நிறுவனங்களின் பாலினை பொதுமக்களாலோ, பால் முகவர்களாலோ ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது சாத்தியமில்லாதது.
Contact 9841836528 to Advertise here