Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

தொழில் முனைவோருக்கான 100 குறிப்புகள்

கடந்த சில வருடங்களாகவே மத்திய மாநில அரசின் தொழில் ஊக்குவிப்பு திட்டத்தினால் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடமும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வேலைக்கு செல்வதைவிட தொழில் செய்ய வேண்டும் எனக்கு வேலை வேண்டாம் நான் யாரிடமும் கைகட்டி நிற்க விரும்பவில்லை…!ஒரு தொழில் செய்து அதில் இருந்து கிடைக்கும் பணம் இருக்கிறதே. அந்தச் சுகமே தனிதான் என்கிற எண்ணமும் அதிகளவில் காணப்படுகிறது சொந்தமாகதொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது, திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், என்னை நம்பி யார் பணம் தருவார்கள்? முறைப்படி ஒரு தொழிலை எப்படித் தொடங்குவது? அதை எப்படி அங்கீகாரப்படுத்துவது? இப்படி நிறையக் குழப்பங்கள்தான் நம் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டு, கிடைத்த ஏதாவது ஒரு வேலை பார்த்தால் போதும் என்ற மனநிலை நமக்கு வந்துவிடுகிறது. பல பேர் தொழில் தொடங்கினாலும் அதில் வெற்றிவாகை சூடுபவர்கள் ஒரு சிலரே…. அதற்க்கு நிறைய காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தகுந்த பயிற்சி, ஆர்வம், கொஞ்சம் அனுபவம் இருந்தாலே போதும் உங்களால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில் 100 ருபாயிலிருந்து 100 கோடி வரை இன்வெஸ்ட் செய்து ஆரம்பிக்க கூடிய சூழல் இருக்கிறோம். அவற்றில் நம்முடைய வசதிக்கேற்ப, அறிவுக்கேற்ப தொழில தேர்ந்தெடுப்பதில் தான் நம் வெற்றி இருக்கிறது. பல பேர் தொழில் தொடங்கினாலும் அதில் வெற்றிவாகை சூடுபவர்கள் ஒரு சிலரே…. அதற்க்கு நிறைய காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தகுந்த பயிற்சி, ஆர்வம், கொஞ்சம் அனுபவம் இருந்தாலே போதும் உங்களால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

நான் இங்கே சொல்லிருக்கும் இந்த 100 குறிப்புகளும் என்னை சுற்றி தொழில் செய்தவர்களை பார்த்து நான் கற்றுக் கொண்ட விசயங்கள் மற்றும் மற்ற வலைத்தளங்கள்,வலைப்பூக்கள், புத்தகங்களில் படித்தவை தான். அவற்றில் எனக்கு தேவையானதை 100 குறிப்புகளாக எடுத்தவற்றை இப்பொழுது பதிவாக இடுகிறேன். இவை கண்டிப்பாக தொழில்முனைவோர் அனைவருக்கும் இது பயனுள்ள பதிவாக இருக்கும் என் நம்புகிறேன். சரி ஆரம்பிப்போமா…?

  1. உங்களையும் குடும்பத்தையும் சேஃப்ட்டி பண்ணிகோங்க..
   வேலையை விடுக்கின்ற போது, , உங்களுக்கான மாதந்திர வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு,வீட்டுக்கடன் போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.
  2. ஆரம்ப முதலீடுகளுக்கு மதிப்பீடு தேவை…
   இதுமட்டுமில்லாமல, கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital) உங்களுக்கு பணம் தேவைப்படும்.

நிரந்திர முதலீடு(Fixed Capital) :

   1. உங்க தொழிலுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் கடமை.
   2. அலுவலக வாடகை முன்பணம்(Office advance) ,
   3. எந்திரங்கள்(Machinery), கணினி(Computer) போன்ற மின் மற்றும் மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods),
   4. மேசை-நாற்காலிகள்(Furniture’s)
   5. வாகனம்(Vehicles)

நடைமுறை மூலதனம்(Working Capital):

   1. வாடகை(Rent) ,
   2. ஊழியர் சம்பளம்(Salaries),
   3. மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges),
   4. பயணச் செலவு (Travel Expenditures),
   5. விளம்பர செலவு(Advertisement Cost),
   6. பொருள் கொள்முதல்(Raw Material Cost).

இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.

  1. தொழிலுக்கு அஸ்திவரத்தை முன்னாடியே பண்ணுங்க…
   தொழில் தொடங்க விரும்புவோர் வேலையில் இருந்து கொண்டே அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான

   1. Project Report தயாரித்தல்
   2. இடத்தை தேர்வு செய்தல் ,
   3. TIN(Tax-Payer Identification Number),
   4. VAT(Value Added Tax Registration),
   5. PAN (Permanent Account Number),
   6. CST (Central sales Tax ),
   7. IEC (Import & Export Code),
   8. Company Registration
   9. தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை ( License ) பெறுதல்
   10. வங்கி கணக்கு (Bank Account) தொடங்குதல்,
   11. அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல் ,
   12. usiness Card, Letter Pad, Brochure, Palm let போன்றவற்றை தயாரித்தல்,

உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.

 1. நேரத்த வீணாக்காதீங்க…..
  வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும் . அதுமட்டுமல்ல… அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான செலவும் தொடங்கிவிடும்.
 2. வாடிக்கையாளர்கள் தான் முக்கியம்…
  எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும் . உங்களுடைய தொழிலில் , நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது , வருமானம் தரக்கூடிய வாடிக்கையாளர்களைத்தான்(Revenue Customers) மற்றும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள (Customer Retention) வேண்டியதிலும் தான் .
 3. யூகித்து செயல்படுங்கள்..
  வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.
 4. உங்களை நீங்களே விளம்பரம் பண்ணிக்கோங்க…
  தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள். ஆனால் சொன்ன படி தொழிலை தொடங்குங்கள் இல்லையென்றால் ஆயிரம் வாய்கள் காத்துகொண்டிருக்கும்.செய்யும் தொழில் சரியாக செய்ய வேண்டும்..
 5. ஒரு தொழில் ஒரே வருமானம்னு இருக்காதிங்க…
  உங்கள் தொழிலில் பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources) வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .
 6. கணிணிமயமாகும் வரை நீங்கள் கணிணியாக இருங்கள்
  கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.
 7. Plan A இல்லனா Plan B இல்லனா Plan C….
  தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி ( Alternative or Backup Planning) என்ன என்பதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்….
 8. தொழில் ஆலோசகர்களும் வழிக்காட்டிகளும் முக்கியம்
  உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும் , வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம் அவங்க உங்களை விட சிறியவராக இருந்தாலும் சரி . குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst,Advocate , Human Resource Advisor போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.
 9. விலைப்பட்டியலை ஒப்பிடுதல்….
  எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier களிடமாவது விலைப்பட்டியலைப் ( Price Quotation) பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
 10. உதவிக்கு குடும்பம் மட்டும்..
  உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில் யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை ஏனென்றால் உங்கள் கூட வேலை செய்பவர்களும் மனிதர்கள் தான் மனம் எப்போது மாறும் என்று தெரியாது.
 11. வாடிக்கையாளர்கள் தான் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு…
  தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற படி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் . உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .
 12. செலவுகளை கையில் அடக்குங்கள் தேவைக்கு ஏற்ப…
  முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத் தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
 13. தேவை தகுந்த கடன்….
  தொழிலில் எவ்வளவு முதலீடு , அதை விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.
 14. கடனை ஒழிக்குற வழிய பாருங்க….
  வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந் தோறும் வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப் பழகுங்கள்.
 15. Supplier Support & Management ரொம்ப அவசியம்….
  முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
 16. பல தொழில் ஆரம்ப கட்டத்தில் வேண்டாம்…..
  எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things) . நீங்கள் பணத்தை தேடி ஓடுவதை விட, பணம் உங்களைத் தேடி வரும் வகையில் , உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .
 17. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே….
  உங்கள் தொழிலில் ஏற்படும் லாப,நட்ட (profit & Loss) கணக்குகள், ஒவ்வொரு மாத,வருட முடிவில் தொழிலை பற்றிய பகுப்பாய்வுகள் (milestone) மிக முக்கியம்.. இது உங்களுடைய தொழிலை மேம்படுத்த உதவும்.
 18. நம்பிக்கை இருந்தால் முதலாளியாகு..இல்லனா தொழிலிலாலியாய் இரு..
  மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே , ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள்.
 19. யாரயும் பிடித்து தொங்காதீர்கள்.
  யாரயும் எதிர் பார்க்காதீர்கள்,உங்களை நம்பி செயல்படுங்கள்.
 20. பணத்துக்காக தொழில் தொடங்காதீங்க…
  பணம் முக்கியம் தான் அதை விட முக்கியம் உங்க தொழில்… நம்ம ஆரம்பிக்குற தொழில் நம்ம சாகும்(life time business) வரை இருக்கும்…
 21. கஸ்டமர் சேவைகளுக்கு செலவு செய்யுங்கள்..
  மார்கெட்டிங்கிற்க்கு செலவு செய்வதை விட .கஸ்டமர் சேவைகளுக்கு அதிகமாக செலவு செய்யுங்கள்.. நம்மளோட கஸ்டமர தக்க வைக்குரது தன் பெரிய விசயம்.
 22. சிற்ந்த குழுவை உருவாக்குங்கள்..
  உங்களுக்கென்று குழுவை உருவாக்குங்கள், அது உங்க நண்பர்களாக இருந்தாலும் சரி, இல்லை உங்களிடம் வேலை பார்கிறவர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கு நம்பிக்கையானவர் என்றால் மட்டுமே தவிர வேறு யாரயும் சேர்காதிங்க.. அது உங்களுக்கு ஆபத்தாய் முடிந்து விடும்.
 23. உங்கள் மாதிரியே உங்கள் பார்ட்னர்…
  நீங்க தொழிலை அதிகமாக்கனும், தொழிலை அடுத்த் கட்டத்துக்கு கொண்டு போகனும்னு நினைச்சா.. தனி ஆளாக இருந்து செய்ய முடியுமென்றால் சரி… தொழிலுக்கு இன்னொருவர் இருந்தால் என யோசிப்பவர்கள் சரியான பார்ட்னரை தேர்ந்து எடுக்கனும்.அது உங்க நண்பர்களாக இருந்தாலும் சரி, இல்லை உங்களிடம் வேலை பார்கிறவர்களாக இருந்தாலும் சரி உங்களுடன் ஒத்த கருத்துள்ள நபர்களை கண்டுபிடியுங்கள்.அதவிட முக்கியம் நீங்க அவருக்கு இப்ப என்ன நிலையில் இருக்கிரோம், எப்படி பிசின்ஸை கொண்டுபோக போகிறோம் எல்லாத்தையும் முன்னடியே பேசிடுங்க அப்ப தான் எதிர் காலத்துல உங்களுக்கு பிரச்சனை வராமல் இருக்கும்.
 24. விரைந்து முடிவெடுங்கள்
  எந்த ஒரு விசயத்தையும் செய்யுறத்துக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிங்க, மத்தவங்க ஆலோசனையும் கேட்டு, நீங்களும் அத பத்தி தெரிஞ்சுகிட்டு நீங்க அத முடிவ விரைவில் எடுங்க எடுத்த முடிவ தப்பா இருங்க்கும் பட்சத்துல மாத்தலமே தவிர இவரு சொன்னா அவன் சொன்னா மாத்து நீங்கனா அத நீங்க செய்வது ரொம்ப கஸ்டம் சரியோ,தப்போ முடிவ சிக்கிரமாவும்,நல்லா யோசிச்சு எடுங்க..
 25. துணிந்து செயல்படுங்கள்..
  பிசினஸை பொறுத்தவரை ரிஸ்க் எடுத்தால் தான் ரஸ்க் சாப்பிட முடியும். அப்படி ரிஸ்க் எடுக்க தயார் இல்லனா ஒரு வறுக்கி கூட சாப்பிட முடியாது.
 26. Updation ரொம்ப முக்கியம்.
  தொழிலின் அன்றை நிலை என்ன,புதிய வரவுகள் என்னென்ன என்பதை ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 27. பெரியதாக எண்ணுங்கள்..
  நாம் நமது நிறுவனம், தொழில் சிறியதாக தொடங்கப்பட்டதற்கு வெட்கப்பட கூடாது, இகழ்வாக கருதகூடாது. கனவு, உழைப்பு, எண்ணம், செயல் பெரியதாக இருக்கும்பட்சத்தில் நாமும் பெரிய இடத்தை அடைந்தே தீருவோம்.
 28. விமர்சனத்திற்கு தயாராய் இருங்கள்…
  உழைப்பினால் நாம் களைப்படைவதை விட பிறரது விமர்சனங்களால்தான் அதிகம் நொறுங்கிப் போகிறோம். ஓர் ஆழமான உண்மை என்னவெற்றால், பாராட்டைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் பலவீனம் நம்மிடம் உள்ளதனால்தான் விமர்சனங்களால் நாம் துவண்டுபோகிறோம்.பிறரது அபிப்ராயங்கள், கேலி, அவமானம், கிண்டல், தாக்குதல், விமர்சனம் போன்றவை பல நேரங்களில் நாம் சந்திக்கவேண்டிவரும். அதற்காக எந்த விமர்சனத்திற்காவும் நமது குறிக்கோளிலிருந்து பின்வாங்கக் கூடாது. அதை நமது உயர்விற்கு உந்துதலாக்கி கொள்ளவேண்டும்.
 29. Competitor களை பார்த்து பயபடாதீங்க.
  பெரும்பாலும் நாம் நம்மை விட வலுவானவர்களையும், பேராற்றல் உள்ளவர்களையும், திறமையானவர்களையும் பார்த்து நமது தைரியத்தை இழந்துவிடுகிறோம்.நம்மை விட பேராற்றல் வாய்ந்தவர்களை பார்த்து ஒருபோதும் அஞ்சகூடாது. அவர்களை பார்த்து நமது தைரியத்தை ஒருபோதும் இழக்ககூடாது.
 30. தோல்விகளை சந்திக்கவேண்டியது வரும்.
  நீங்கள் வெற்றி அடைவதற்கு நீண்ட காலம் ஆகலாம். வெற்றிகள் பெரும்பாலும் பல தோல்விகளுக்கு பிறகே கிடைக்கும். நாம் வெற்றி மற்றும் தோல்வி இரண்டுக்குமே நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.
 31. தொழிலை விட்டு வெளியேற தோன்றும்..
  எல்லாம் நமக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கும் போது நமக்கு நேர்மறை எண்ணங்களே ஆக்கிரமித்திருக்கும். ஆனால் எதிர்மறையாக செல்லும் பட்சத்தில் பெரும்பாலான தொழில்முனைவோருக்கு அதிலிருந்து வெளியேறும் எண்ணமே தோன்றும். வெளியேறும் எண்ணம் உள்ளவர்கள் தொழிலில் வெற்றி அடைந்ததில்லை. எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே விஸ்வருப வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
 32. மத்தவங்ககிட்ட இருந்து நிறைய கத்துகோ..
  நமக்கு தெரியத ஒரு விசயத்த யாரா இருந்தாலும் சரி அவங்க கிட இருந்து கத்துகோங்க.. ஒரு சின்ன விசயம் தான் விடாதிங்க.
 33. கனவு காணுங்கள்:
  நம்ம ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா சொன்னது கண்டிப்பா உங்களுக்கு தெரியும். நான் சொல்லனும்னு அவசியம். இல்லை.
 34. குறுக்கு வழி ஒன்றும் இல்லை…
  தொழிலில் மட்டுமல்ல எந்த ஒரு விசயத்துயும் சரி வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி ஒன்றும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 35. செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்….
  இது என்னால் தான் நடந்தது என்று செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு தவறை திருத்தி கொள்ள முடியும்.
 36. கட்டமைப்புகளை உருவாக்குங்கள்.
  நான் ஆரம்பிக்கின்ற தொழில் இப்படி தான் இருக்கனும்.மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல், கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
 37. எதற்கும் திருப்தி அடையதிங்க..
  உங்க தொழிலில் எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி. இது எனக்கு போதாது என்று நினையுங்கள்.
 38. 1:5 விகித்தை follow பண்ணுங்க….
  ஒருவரைப் பணியில் அமர்த்தும் போது அவரால் 1:5 என்ற விகிதத்தில் தொழிலுக்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். அதாவது, ஒருவருக்கு ஒருபங்கு சம்பளம் வழங்கினால், அவரால் தொழிலுக்கு 5 பங்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். இது தவறும்போது தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சேவைத் துறையில் இந்த 1:5 விகிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.
 39. மார்கெட்டிங்கில் scares ஐ பயன்படுத்துங்கள்…
  scares என்பது மார்கெட்டிங் யுக்தியாகும்.ஒரு பொருளை விற்பதற்கு மக்களிடம் பயத்தை ஏற்ப்படுத்துதல். “எங்களிடம் குறைவான stock களே உள்ளன. வாங்குவதற்க்கு இன்றே முந்துங்கள்” என்று விளம்பரங்களை பார்திருப்பீர்கள் அது தான் இந்த scares.
 40. மார்கெட்டிங் Updation ரொம்ப முக்கியம்…
  மார்க்கெட் பற்றிய ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் அவசியம் தேவை. இல்லையெனில் சரியான நேரத்தில், சரியான வாடிக்கையாளரை சென்றடைய முடியாமல் போய்விடும். மார்க்கெட் ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் இருந்தால்தான் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் கணிக்க முடியும்.
 41. ஆன்லைன் மார்கெட்டிங் பண்ண ஆரம்பியுங்கள்…
  இன்றைய கால கட்டத்தில் ஆன்லைன் மார்கெட்டிங் ஒரு பிசின்ஸ்க்கு ரொம்ப முக்கியமான ஒன்னு. இதை பற்றி நான் சொல்ல தேவை இல்லை. google,Facebook,twitter,Linkedin,என ஆன்லைன் மார்கெட்டிங் பண்ண ஆரம்பியுங்கள், இதற்கு செலவு பண்ணவும் தயாராக இருங்கள்…
 42. பொறுமையும்,காத்திருப்பும் மிக முக்கியம்.
  உங்க பிசின்ஸ் சூடு பிடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். ஏனென்றால் விதை விதைத்த உடன் மரம் வளராது….
 43. உங்களுக்கு உதாரணம் நீங்கள் தான்..
  உங்கள் யாரும் உதாரணம் தேவை இல்லை உங்களுக்கு உதாரணம் நீங்கள் தான்.. ஏனென்றால் ஒரு விசயத்தில் தவறு செய்து மாட்டிக் கொள்வதும் நீங்கள் தான், சரியாக செய்து நிம்மதி இருப்பதும் நீங்கள் தான்.
 44. தொழிலை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லுங்கள்…
  என் செலவு போக என்னிடம் பணம் வரவு இருக்கிறது என்பவர்கள் உங்கள் பிசின்ஸ்க்கு புதுமையான விசயத்தை செய்ய ஆரம்பியுங்கள்…
 45. உங்கள் எண்ணம் போல் தான் உங்கள் பிசினஸ்…
  நீங்கள் நேர்மறையானவர் எனில் உங்களுக்கு உங்கள் பிசினஸ் plus இல்லையென்றால் minus தான்.
 46. Cheating தான் பிசினஸ்
  இந்த உலகத்தில் உள்ள அனைவருமே ஏமாற்றுபவர்கள் தான் ஒரு சில விசயத்தில் ஏமாளிகள் தான் என்பதை அறிந்து பிசின்ஸை செய்யுங்கள்…
 47. தலைமை பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்..
  உங்களின் பேச்சு, உடை, பழகும் விதம், இதுவே நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்
 48. தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள்..
  உங்கள் தொழிலுக்கு என்ன தேவை,உங்கள் வாடிக்கையாள்ர்க்ளுக்கு என்ன தேவை,உங்களின் பணியாளர்க்ளுக்கு தேவை என்ன என்ப
 49. 52.ஏழு தலைமுறைக்கும் முதலாளியாய் இரு., கடனாளியாகதே…
  எந்த ஒரு விசயத்திலும் கடன் இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் வாழ்க்கை முழுவதும் கடனாளியாய் இருப்பது தொழில் முனைவோருக்கு அழகல்ல.
 50. நிபுணராக இருக்க தேவையில்லை…
  எந்த ஒரு விசயத்திற்க்கும் நிபுணராக அவசியமே இல்லை… அந்த விசயத்தை பற்றிய அடிப்படை மற்றும் கற்று கொள்ளும் ஆர்வம் இருந்தலே போது உங்கள் தொழிலிலை கண்டிப்பாக உய்ர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.
 51. பயிற்சியும், முயற்சியும்…
  பயிற்சியும், முயற்சியும் தான் உங்கள் தொழில் வாழ்க்கையை நிர்ணயிக்கும். எந்த தொழிலாக இருந்தாலும் சரி அது உங்களுக்கு தினமும் ஒரு பாடத்தை கற்று தரும்.
 52. எல்லாம் சரியா இருக்கனும்…
  சரியான பொருள் அல்லது சேவையை(Product or service), சரியான இடத்தில்(place), சரியான நேரத்தில்(time), சரியான விலைக்குக்(Price) கிடைக்கச் செய்வது தான் பிசின்ஸில் ஒரு சிக்கலான ஒன்று அதை சரியாக செய்தால் சக்சஸ் தான்.
 53. 80/20 விதி உங்கள் தலைவிதி…
  ,நமது நிறுவனத்தின் மொத்த வருவாயில் சற்றேறக்குறைய 80 சதவீதம், 20 சதவீத வாடிக்கையாளர்கள் மூலமாகப் பெறப்படுகிறது.80/20 விதியை நம்பிப் பயன்படுத்துங்கள்.அப்போது தான் நீங்கள் வாடிக்கையாளர் விசுவசத்தை (CUSTOMER LOYALITIY) பெறமுடியும்.
 54. ரகசியம் உங்களிடம் மட்டும்…
  தொழிலிலை பற்றிய எந்த ஒரு விசயமாக இருந்தாலும் சரி அது உங்களுக்கும் உங்கள் தொழில் துனைவருக்கும் மட்டுமே தவிர வேறு யாருக்கும் தெரியாதிருப்பது நல்லது.
 55. நிர்வாக திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்…
  தொழிலிலுக்கு மிக முக்கியமான ஒன்று தான் நிர்வாகம் இது இல்லை என்றால் உங்கள் தொழில் உங்களுக்கே ஆப்பு வைத்துவிடும்.
 56. பணியாளரும் தூண்களே…
  ஒரு சரியான பணியாளரை சரியான வேலைக்கு அமர்த்துவது தான் தொழிலில் மிக ரிஸ்க்கான வேலை. அதை சரியாக செய்தாலே நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்க போகிறீர்கள். என்று அர்த்தம்.
 57. மார்கெட்டிங் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்…
  மார்கெட்டிங் என்பது விற்பனை தான் என்று நினைகிறீர்கள் என்றால் அது முற்றிலும் தவறு. எனவே மார்கெட்டிங் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்…
 58. முதலீட்டாளர்கள் மிகவும் தேவை.
  நம் தொழிலை விரிவுபடுத்த முதலீடு மிக அவசியம். நம் தொழிலை நம்பி முதலீடு செய்யக்கூடியவர்களைத் தேடிக் கண்டறிவதும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்வகையில் நமது கனவை விவரித்து திருப்திப்படுத்துவதும் மிக முக்கியம்.
 59. வாடிக்கையாளரே வியாபாரிகள்
  லாபத்தின் ஒரு பகுதியை, உங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (PROFIT SHARING). இதனால் உங்கள் லாபம் குறையாது, லாபம் கூடும்!
 60. தரம்+சேவை = கூடுதல் லாபம்
  மார்கெட்டிங் ஜாலங்கள், விளம்பரத் தந்திரங்கள் போன்றவற்றைவிட, தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள்தான் ஒரு நிறுவனத்திற்கு அதிகப் புகழை, கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும்.
 61. உழைப்புத்தான் வாய்ப்புக்களை திறக்கும் சாவி…
  கடினமாக உழைப்பதை விட சாமர்த்தியமாக உழைக்க கற்றுகொள்ளுகங்கள்.
 62. காப்பி அடிப்பதில் தவறே இல்லை..
  அடுத்தவர்கள் செய்கிற நல்ல விஷயங்கள்,லாபம் ஈட்டும் முறைகள், தொழில் உத்திகளை கவனித்து, அவற்றை தாராளமாக பின்பற்றுங்கள். இந்த விஷயத்தில் காப்பியடிப்பது தவறே இல்லை.
 63. இப்போ இப்போ இப்போ ராமசாமியாய் இருங்கள்..
  ஒரு நல்ல யோசனையை, உடனே செயல்படுத்துங்கள். ஆனாலும் அதைச் யோசித்து செயல்பட மறவாதீர்கள்.
 64. நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவும் சரியா இருக்கனும்…
  நிறுவனங்களின் பொறுப்பு வெறும் விற்பனையோடு மட்டும் முடிந்துவிடவில்லை. நிறுவனத்தில் இயங்கும் எல்லா பிரிவுகளும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் ஒட்டுமொத்த வெற்றியும் லாபமும் அதிகரிக்கும்.
 65. OLD IS GOLD.
  தொழிலில் வெற்றிபெருவதற்குப் ‘பழைய’ அந்தகால கொள்கைகள், நம்பிக்கைகளெல்லாம் சரிபடாது என்று நினைக்காதீர்கள். அவை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.
 66. எங்கிருந்து ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்..
  உறவுகளின் சிபாரிசு, நண்பருக்குத் தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்வது கூடவே கூடாது. தொழிலுக்கு முதல் எதிரியே இந்த சிபாரிசுப்படி ஆட்களை நியமிப்பதுதான். அவர்களை முழுமையாக வேலை வாங்கமுடியாமல் சிபாரிசு தடுக்கும்.அதே பொருத்தமான உறவினர்கள் வீட்டில் இருந்தால், அவர்களைப் பயன்படுத்தலாம். இது நமது பிஸினஸ் என்பதால், அவர்கள் அக்கறையோடு எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செய்வார்கள். வேகமான வளர்ச்சிக்கு அது உதவும்.
 67. வாடிக்கையாளர்களின் பார்வையில் சிந்தித்தல்
  எப்போதும் வாடிக்கையாளர் பார்வையில் பிஸினஸை சிந்தியுங்கள். நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைவிட வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே முக்கியம்.
 68. பணப்புழக்கம்
  நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கையில் பணப்புழக்கம் இல்லாவிட்டால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம்.பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்ன, என்ன என்று யோசிக்கிறது.
 69. எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே…
  எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே..அது தரும் லாப சதவிகிதத்தில்தான் மாறும். முதலீடு செய்து தங்க முட்டையை எடுப்பதும், தவிட்டு முட்டையைப் பெறுவதும் நம் கையில்தான் இருக்கிறது!
 70. வேலையாட்களை நம்பாதே…
  எந்த வேலைக்கு ஆள் இல்லையென்றாலும் அடுத்த ஆளை வைத்து அந்த வேலையைத் தொடரும் அளவுக்கு இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களையும் தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.
 71. யாரும் வரபோவதில்லை..
  நீங்கள் எந்த மந்தையோடும் சேராதிருங்கள். ஏனென்றால், தொழிலில் இழப்பென்று ஒன்று வந்தால், அப்போது உங்களை மந்தையோடு சேர்ந்தவர்கள் வந்து நிற்கப் போவதில்லை.
 72. வெற்றியை பகிர்ந்துக்கொள்..
  நம்முடைய வெற்றிக்கு நாம் மட்டும் உரிமைகொண்டாடமுடியாது. வெற்றிக்கான பயணத்தில் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்கள் எல்லோரையும் மறக்காமல் நினைவு கூர்வதும், அவர்களோடு அந்த வெற்றியை பகிர்ந்துகொள்வதும் அவசியம்.
 73. மாற்றம் ஒன்று தான் மாற்றாதது…
  எல்லா தொழில்களிலும் காலப்போக்கில் பல மாற்றங்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். தேவைப்பட்டால் அவற்றுக்கேற்ப நமது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும்.
 74. நிறுவனத்தின் அடிப்படையை புரியவையுங்கள்..
  ஒரு நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகள், நம்பிக்கைகள் என்னென்ன என்பதை நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள்வரை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும். அப்படி உருவாகும் இயல்பான கலாசாரம்தான், அந்நிறுவனத்துக்குப் பெரிய வெற்றிகளைத் தேடித் தரும்.
 75. வாடிக்கையாளர் விமர்சனங்கள் மிக முக்கியம்..
  நமது கடைக்குள், வாடிக்கையாளர்கள் எந்த அளவு செளகாரியமாக உணர்கிறார்களோ, அந்த அளவு அவர்கள் அதிகம் பொருட்களை வாங்குவார்கள். அவர்களை சிரமப்படுத்தாதபடி வேண்டிய வசதிகளை செய்துகொடுங்கள். ஷாப்பிங் என்பதை ஓர் உற்சாகமான அனுபவமாக மாற்றுங்கள். உங்கள் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், லாபமும் தானாக அதிகரிக்கும்.
 76. தொடர்பு
  பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு (Entrepreneurs) தேவையான பண்பாகும்.
 77. தனி முத்திரை பதியுங்கள்..
  தொழிலின் முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள். நற்பெயரை சம்பாதியுங்கள்.
 78. காலை வாராதே கையை பிடி..
  யாரை கெடுத்து பணசம்பாதிப்பது தொழில்முனைவோருக்கு அழகல்ல. மற்றவர்களுக்கு உதவி செய்து தூக்கி விடுங்கள்.
 79. உடல் ஆரோக்கியம் காப்பது மிகவும் நலம்.
  உடல் ஆரோக்கியம் தான் தொழில்முனைவோருக்கு மிக அவசியம். உடலில் தெம்பு இருந்தால் தான் உழைப்பதற்க்கு தயாராய் இருப்பீர்கள்.
 80. உநேரம் கிடைத்தால் சதுரங்கம் (CHESS) விளையாடுங்கள்…
  செஸ் விளையாட்டு தொழில்முனைவோருக்கு புதுமையாக யோசிக்கவும், புது யுக்திகளை கையாளவும் இது உதவும்
 81. எதிர்காலத்தை கணியுங்கள்…
  தொழிலின் எதிர் காலத்தை பற்றிய சிந்தனை இருந்தால் தான் உங்களால் தொழிலை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டுபோக முடியும்.
 82. அச்சத்தை எதிர்கொள்ளுங்கள்..
  பயம் தான் தொழில்முனைவோருக்கு ஒரு பெரிய குறை. என்னால முடியும்,நான் கரெக்டா பண்ணிருகேன், பிரச்சனை வந்த பார்த்துகலாம்,சமாளிச்சுடலாம்குற பாசிட்டிவ் எண்ணங்களை (POSITIVE THOUGHTS) மனசுகுல்ல விதைத்தால் மட்டுமே முடியும். அதுக்கு நம்மல முதல்ல முழுமையாக நம்பனும்.இடி இடிச்ச உடனே பயப்படுறவங்க ஆலம் பத்து அர்ஜுனம் பத்து சொல்லுறங்களே அது போல தான்.. என்னால முடியும்,நான் கரெக்டா பண்ணிருகேன், பிரச்சனை வந்த பார்த்துகலாம், சமாளிச்சுடலாம்குற பாசிட்டிவ் எண்ணங்களை மனசுகுல்ல சொல்லிகிட்டே இருங்க… பயம் இருக்கும் இடத்தில் பணிவும் இருக்காது துணிவும் இருக்காது.
 83. வெற்றியும் தோல்வியும்…
  ஜெயித்தால் சந்தோசம்.. தோற்றால் அனுபவம் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கான OUTPUT இவைத்தான்.
 84. பொன் முட்டைகாக கோழியை அறுக்க வேண்டாம்…
  ஒரு தொழிலை ஆரம்பித்துவிட்டு அதில் லாபம் வரவில்லை என்பதற்காக முழு தொழிலையும் விட்டுவிட்டு வேறு தொழில் ஆரம்பிக்க கூடாது. கரு உருவாகுவதற்க்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும்.
 85. மன அழுத்தம் வந்தாலும் போராடு…
  போட்டி, சந்தையில் தேவைகள் குறைவது, லாபம் மற்றும் வருமானம் குறைவது, முதலீட்டளர்கள் கொடுக்கும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் (stress) ஏற்படலாம். அது எல்லாவற்றையும் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
 86. சொந்த வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள்…
  நீங்கள் தொழிலில் எடுக்கும் முடிவுகள் எந்தவிதத்திலும் உங்கள் சொந்த வாழ்க்கையில் (personal life) பாதிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கும் இடையே தெளிவான கோட்டை வரையறுக்க வேண்டும். வாழ்க்கை சமநிலையை (life balance) பின்பற்றவேண்டும்.
 87. வாய்ப்புக்களும் பிரச்சனைகளும்…
  ஒவ்வொரு பிரச்சனைகளும் நமக்கு வாய்ப்புகளே…! அதனால பிரச்சனைகளை சால்வ் பண்ணி வாய்ப்புகளை யூஸ் பண்ணுங்க….பண்ண கற்று கொள்ளுங்கள்…. பிரச்சனையை நினைத்து ஓடாமல் தீர்வை தேடிக்கொண்டு ஓடுங்கள்.
 88. சொந்த தேவை கொஞ்சம் தேவை..
  உங்கள் சொந்த தேவைகளை குறைத்துக்கொள்ளுங்கள். அதற்க்காக கஞ்சனாக இருக்க வேண்டியதில்லை. தேவை எது என அறிந்து மற்றவற்றை தவிர்த்தாலே போதும்.
 89. இருக்கிறதோ அதை முதலீடு செய்யுங்கள்…
  நீங்கள் செய்ய துடிக்கும் வியாபாரத்தில் எது உங்களிடம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறிர்களோ அதை முதலீடு செய்யுங்கள். அது பணம்,ஆற்றல்,அறிவு என் எதுவாக இருந்தாலும் சரி தொழில் தொடங்கவும் ,வெற்றி பெறவும் மிக முக்கியமானது அதுதான்.
 90. SWOT பகுப்பாய்வு மிக முக்கியம்…
  தொழில்முனைவோருக்கும் தொழிலுக்கும் மிக முக்கியமானது இந்த SWOT ANALYSIS. இதன் மூலம் உங்களுடைய பலங்கள்,பலவீனங்கள்,அச்சுறுத்தல்கள்,வாய்ப்புக்கள் என அனைத்தையும் அறிய உதவும்.
 91. பணியாளர்களுக்கு பயிற்சி அளியுங்கள்…
  ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியை அவ்வபோது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும். நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபோது அவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அதனால் வகுப்பறை பயிற்சியாகவோ, நேரடி பயிற்சியாகவோ , இணையத்தின் மூலமான பயிற்சியாகவோ அவ்வபோது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் (Innovation) செய்து கொள்வது நல்லது.
 92. செயல்படுங்கள் அல்லது செயல்படும் வரை காத்திருங்கள்..
  ஒரு வெற்றி அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே முயற்சி செய்து அடைவது. தொழிலை பொறுத்தவரை நீங்கள் முயற்சி செய்வது தான் சிறந்த வழி.
 93. விட்ட இடத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்..
  சந்தையில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கவேண்டுமெனில் சில இக்கட்டாண சூழ்நிலையில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. விட்ட இடத்தை தக்க வைத்து கொள்ள அதிகம் பாடுபடுங்கள்.
 94. மனிதர்களை கையாள கற்றுக் கொள்ளுங்கள்..
  தொழில்முனைவோருக்கு அவசியமான மற்றொரு பண்பு, மனிதர்களை கையாளும் திறன். தொழில், வியாபாரம் என்பது முழுக்க முழுக்க மற்றவர்களின் ஆதரவிலும் அவர்களால் உண்டாக்கப்படும் வாய்ப்புகளினாலும் ஏற்பட்ட ஒரு விஷயம். எவருடனும் எளிதில் பழகும் திறன் சிலருக்கு இயல்பாக வருவது. ஆனால் இதைக் கற்றுக்கொள்வதோ பயிற்சிகள் செய்து வளர்த்துக்கொள்வதோ ஒன்றும் கடினமான காரியம் இல்லை.
 95. தொழில் கடன் வாங்குவது எளிது..
  தொழிற்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.
 96. தொழில் கடன் வாங்க D.S.C.R ரொம்ப முக்கியம் ..
  டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். Debt-Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து 10 ஆயிரம் போக, குறைந்தது 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5-க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும்.
 97. புத்தகங்கள் படியுங்கள்..
  புத்தகங்கள் படிப்பது தொழில் முனைவோருக்கு ஒரு மிக பெரிய பலம் என்றே சொல்லலாம். என்னுடை ஒரு கருத்து THE 7 HABBITS OF HIGHLY EFFECTIVE PEOPLE (அதிக ஆற்றல் மிக்க மனிதர்களின் 7 பழக்கவழக்கங்கள்) என்ற கண்டிப்பாக தொழில் முனைவோர் அனைவரும் படிக்க ஒரு புத்தகம்.
Deepaksanth.,B.Tech(YTC)
Blogger & Creative Designer @ Spring Soltions
Facebook Name- hpmaverick
Contact 9841836528 to Advertise here