Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

business-failure-2-500x500_cநேத்து ஒரு ஹோட்டல் போனேன், என்னா கூட்டம், அப்பப்பா செம்மைய சம்பாதிக்குறான். இதே ஏறியால நம்மலும் ஒரு ஹோட்டல் போட்டு செட்டில் ஆயிடலாம்.

இன்னைக்கு கால் டாக்ஸில அரும்பாக்கம் வரைக்கும் போனேன். டிரைவர் கிட்ட கேட்டேன், இதுல உங்களுக்கு வருமானம் எப்படி இருக்கு என்று. தினமும் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் ரூவா வருமானம் சார் என்றார். அட கணக்கு போட்டு பார்த்தா 90000 ரூபா, ஒரு டாக்ஸி வாங்கி , நல்ல டிரைவர் போட்டு , கால் டாக்ஸில அட்டாச் பண்ணுனா சும்மாவே 50000 ரூபா , நம்மலும் ஆரம்பிச்சிடனும்.

சின்னதா தான் சுரேஷ் துணி கடை வெச்சான். இப்போ பாரு 8 வருஷத்துல எவ்ளோ பெரிய கடை, காரு, பங்களா சொகுசா வாழுறான் யா, நம்பலும் துணிக்கடை போட்டு பெருசா ஆகிடனும்.

தொழில் என்பது எல்லோரும் சுலபமாக ஓடும் ஓட்ட பந்தயம் போல் நிறைய பேர். நல்ல 7-Ways-To-Learn-From-Business-Failure-To-Successலாபம் கிடைக்கும் என்ற வெற்று கனவோடு மேற்கூறிய உதாரணங்களில் ஏதோ ஓர் ஆர்வத்தால், அடுத்தவரை பார்த்து சுறுசுறுப்பாக பிசினஸ் ஆரம்பித்தவர்கள் முக்கா வாசி பேரு புது பொண்டாட்டி கதை போல , ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று தொன்னூறு நாள்ல டிவோர்ஸ் வாங்கி விடுகிறார்கள். சோடா பாட்டில் எபெக்ட் என்று இதை செல்லமாக சொல்லலாம்.

அட போயா உனக்கு பொறாமை, உனக்கு ஒண்ணுமே தெரியல, உனக்கு என்ன தெரியும் என் திறமைய பத்தி, எனக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கான். இது எல்லாம் உங்க மயின்ட் வாய்ஸ்சா இருக்கலாம்.

அப்போ நாங்க என்னத்த தான் செய்யறது எங்களுக்கு மேல் வருமானம் வேணும் . நாங்க ஏதாவது வியாபாரம் செய்யணும், எங்க ஸ்டேட்டஸ் வளர்க்கணும். ஆம் இது இன்று நிறைய பேர் எண்ணமாக இருக்கிறது.

மேலே சொன்ன எல்லாம் உங்களை வியாபாரத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லுவதற்காக இல்லை. நீங்கள் ஆரம்பிக்கும் உங்கள் தொழிலின் தன்மைகளை அலசி ஆராயும் ஓர் கண்ணாடி அணிந்து, உங்கள் பார்வையை சரிசெய்து கொண்டு செயல்படுங்கள் . உங்கள் வியாபார வெற்றியை நிச்சயமாக தக்கவைத்து கொள்ளலாம்.

businesssuccessஇங்கு எதை விதைத்தாலும் வளர கூடிய பொன் விளையுற பூமி, ஹார்ட் ஒர்க் நமக்கு தெரியும், ஸ்மார்ட் ஒர்க் நமக்கு புதுசு ஆனா ரொம்ப ஈஸி. நம் இந்தியர்களின் திறமை உலகில் அனைவராலும் மதிக்க கூடிய திறமை. ஸ்மார்ட் ஒர்க் சூட்சுமம் பெரிய விஷயம் இல்லை. உங்கள் வியாபாரத்தின் வேலை பகுதிகளை தொகுத்து, மனதளவில் ஒத்திகை பார்க்க வேண்டும். அந்த ஒத்திகையில் நன்மை தீமையை அலசி ஆராய்ந்து. உங்கள் பார்வையில் படும் பிரச்சனைகளுக்கு உங்களால் முடிந்த ஒரு தீர்வை குறிப்பு எடுத்து கொள்ளுங்கள். தெளிவாக மனதளவில் முதலில் வெற்றி பெறுங்கள். வெற்றி பெற்ற அனைவரும் இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஒன்று மனதளவில், இரண்டு செயல் முறையில்.

ஒரு பெரிய வேலைய முடிக்கணும்னா ஒன்பது சின்ன வேலைய முடிக்க தெரிஞ்சி இருக்கணும். பெரிய இலக்கை நிர்ணயித்து. அதை சிறு வேலைகளாக பிரித்து , அந்த சிறு வேலைகளை முடித்தீர்களானால் . பெரிய வேலை சுலபமாக நடை பெற்று இருக்கும். பெற்ற சிறு வெற்றிகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள். உங்கள் பலம் அறிந்து அடுத்த கட்ட இலக்கை தீர்மானியுங்கள். அதையும் சிறு சிறு வேலைகளாக பிரித்து செய்து முன்னேறுங்கள். தொடர்ந்த பயிற்சியும் முயிற்சியும் உங்கள் பாதையை வெற்றி பாதையாக கண்டிப்பாக மாற்றும்.

உங்கள் தொழில் வெற்றி தொழிலாக இருக்கட்டும். எதாவது சந்தேகம் இருந்தால் , சிறு ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளுங்கள். என்னால் முடிந்த வெற்றி பெற கூடிய ஆலோசனை உங்களுக்கு அளிக்க காத்து இருக்கிறேன்.

பிஸினஸ் டி-என்-ஏ   வெங்கட்

+91 9841836528

venkat@uniqueimpression.co.in

Contact 9841836528 to Advertise here