Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

வெற்றியாளர்களின் சரித்திரம்

tamil-vetri-nichayam-1-728

ஊருக்குள்ளே வியாபாரம் செய்கிற வெற்றியாளர்களின் சரித்திரத்தை நோண்டுங்கள்.

அவர்களில் பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த வெற்றிக்கான காரணத்தை தேடுகிற போதே, நம்மையும், நம்மை சுற்றி இருக்கிற சமூகத்தையும் ஒரு சுய மதிப்பீடு செய்வது அவசியம்.

வெளியில் இருந்து வ்ந்தவர்கள், ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்கிற மனதோடு புதிய ஊரில் காலை பதித்த்வர்கள்.

அவர்களுடைய வியாபார முடிவுகள் தைரியமானவை.
அதோடு, சுற்றி இருப்பவர்களை பற்றி அவர்கள் கவலை பட தேவை இல்லை.

அவர்களுக்கு வெற்றி மட்டுமே லட்சியம்.

அதே சமயம், உள்ளூர்காரனின் நிலையை பாருங்கள்.

‘ஊருக்குள்ளே கத்தரிக்காய் வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும்’ என்பது அவனுடைய உறுதியான கணிப்பு.
அவனுடைய சுற்றமோ, ‘இஞ்சினீயரிங் படித்து விட்டு கத்தரிக்காய் வியாபாரமா..?’ என்று கேலியாய் சிரிக்கிறது.

அடுத்த முக்கியமான விஷயம் எதிர்பார்ப்பு.

ஊருக்குள்ளே நம்ம ஜாதிக்காரன் பாதி பேர் இருக்கிறான் என்கிற நினைப்பில் வியாபாரத்தை ஆரம்பித்தால், ஏமாந்துதான் போவீர்கள்.

எந்த ஜாதிக்காரனாய் இருந்தாலும், விலை மற்றும் தரம் மட்டுமே வாங்குகிற பொருளுக்கான பென்ச்மார்க்குகள்.

சொந்தக்காரர்களும், நண்பர்களும் நம்மிடம் வியாபாரம் செய்யவே மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது.
கடன் கொடுக்கிற வரை ரெகுலராக வருவார்கள்.
கடனை திருப்பி கேட்டால், போச்சு..!
திரும்பியே பார்க்க மாட்டார்கள். வாங்கின கடனை மறந்து விட்டு , தெரியாதவன் கடையில் காசை கொடுத்து வாங்குவார்கள்.

தெரிந்தவன் அல்லது சொந்தக்காரன் என்று வருபவர்களுக்கு குறைந்த விலையில் பொருள் கொடுத்திருந்தாலும், நீங்கள் காலி.

இதை பெருமையாக சொல்லி திரிந்து, உங்களை பலருக்கும் எதிரி ஆக்கி விடுவார்கள்.

இப்போது ஊருக்கு புதிதாக தொழில் தொடங்க வருபவர்களை பற்றி.

இந்த ஊருக்கு இது ஆகாது என்று நீங்களாகவே முடிவு செய்திருக்கிற வியாபாரம் ஒன்றை கூட, கையில் ஏந்தி வருவார்கள்.

பெரும்பாலும், அவர்கள் மைனாரிட்டி ஜாதியாக இருப்பார்கள்.

அவர்களை பொருத்த வரை, எல்லா கஸ்டருமே ஒன்றுதான்.

ஒரே விலை; மற்றும் கடன் கிடையாது.

தாங்கள் சம்பாதிப்பதை, பெருபாலானாவர்கள் வியாபாரம் செய்கிற ஊரில் முதலீடு செய்ய மாட்டார்கள்.

தேவை இல்லாமல் ஊர்காரர்களிடம் பேச மாட்டார்கள் (முக்கியமாக அரசியல் மற்றும் ஜாதி சார்ந்த விஷயங்கள்).

இதெல்லாம் இல்லாமல், வேறு காரணங்கள் இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆசை.கமெண்ட்டில் பதியுங்கள் .

எழுத்து  சண்முகநாதன் ஸ்வாமிநாதன் அவர்கள்!

Contact 9841836528 to Advertise here