Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

k3
இன்றைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்கள் சொல்லிவிட்டு சென்றார்…. அவர் வார்த்தைகள் இந்திய மக்கள் தொகை கணக்குப்படியும் சரியாகவே உள்ளன.. சமீபத்து மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவீத இளைஞர்களே இந்தியாவை அலங்கரித்துக்கொண்டு உள்ளனர்.. அவர்களின் மிகப்பெரிய பிரச்னை, வேலை வாய்ப்பின்மை.. படித்த படிப்புக்கு வேலை என்பது இல்லாமல், இப்பொழுது கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்க இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள்.. இருப்பினும் இந்த குறைபாடு சமூகத்தில் அகலவே இல்லை.. வேலைக்கு தான் செயல் வேண்டுமா ?!
நமக்கு வேலை கொடுப்பவர் இடத்திற்கு நாம் முயற்சிப்பதே சுய தொழில் துவங்கி நாமே முதலாளியாகி நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் இடத்திற்கு செல்வது.. 1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது பல துறைகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. தொலைபேசித் துறையில் பார்தி ஏர்டெல், ஐ.டி. துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, வங்கித் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் பேங்க், மருந்துத் துறையில் பயோகான், டாக்டர் ரெட்டீஸ் என பல நிறுவனங்கள் உருவாகி, இந்தியாவின் புதிய தொழில் முகத்தை உலகுக்கு காட்டியது.
k2
கன்ஸ்யூமர் துறையில் ஐ.டி.சி., கவின்கேர், மாரிகோ என பல நிறுவனங்கள் உருவாகி, இன்றும் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இவற்றில், இன்டர்நெட், மொபைல் டெக்னாலஜி, டெலிகாம் போன்ற துறைகளில் உருவாகிவரும் வாய்ப்புகளை புதிய பொருளாதாரத் தொழில்களாக நாம் கருதலாம். உதாரணத்திற்கு, உணவகங்கள் (ரெஸ்டாரன்ட்ஸ்) முன்பெல்லாம் ஒரு வகைதான். ஆனால், இன்றோ துரித உணவகம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெரிக்கன், இத்தாலியன், அரேபிக் என்று பல வகை – ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டே போகின்றன. இவை மட்டுமல்ல, இன்னும் பல புதிய தொழில் வாய்ப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, கால் டாக்ஸி ஏற்கெனவே இருக்கிறது. இப்போது கால் டாக்ஸிக்குப் பதிலாக கால் ஆட்டோவும் வந்துவிட்டது! வாடகைக்கு சைக்கிள் விட்டோம் முன்பு. இனி வாடகைக்கு கார்/பைக் விட்டால் எப்படி இருக்கும்? இதுவும் வந்துவிட்டது.. இதுபோல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்னென்ன தேவை என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
k1
புதிய ஒயினை புதிய கோப்பையில் தர முடியுமா என்று பாருங்கள். அல்லது பழைய ஒயினை புதிய கோப்பையில் தரமுடியுமா என்று யோசியுங்கள். அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், அமெரிக்கர்கள் குறைந்த மார்ஜின் உள்ள பிசினஸைத் தூக்கி எறிந்து கொண்டே இருப்பார்கள். அதேசமயம், புதிய ஹை மார்ஜின் தொழில்கள் உலையில் வெந்துகொண்டே இருக்கும். இதுவே அந்நாட்டை எப்போதும் உலகளவில் தலைமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இதுமாதிரியான தொழில்களைத் தேர்வு செய்யும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அனுபவம் இல்லாத புதிய தொழில், ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்காது என்பதால் முதலீடு கிடைப்பது கடினம், அரசின் சட்டதிட்டங்கள் திடீர் பாதகங்களை உருவாக்கலாம்… என நெகட்டிவ் அம்சங்கள் இத்தொழிலில் இருந்தாலும், பாசிட்டிவ் விஷயங்களும் நிறைய இருக்கவே செய்கின்றன. இணையத்தில் ஒன்று இரண்டு விற்பனைகள் நடந்து கொண்ட சூழலை மாற்றி ஒரே நாளில் 1500 கோடி விற்பனை இலக்கை எடுத்துள்ளது பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தகம்.
புதிய நோக்கமும், புதிய சிந்தனையும் வெற்றியை நம்மிடம் வர வைக்கும்.. புதிய தொழில்கள் மூலம் நம் நாட்டில் தோண்டி எடுக்கவேண்டிய பணம் இன்னும் ஏராளமாக உள்ளது. அதைத் தோண்டுபவராக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது? அப்படி நீங்கள் தோண்ட நினைத்தால், ஹை மார்ஜின் பிசினஸாக யோசியுங்கள். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். வெளியில் சென்று உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நம்பகமானவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிசினஸ் ப்ளானை பட்டை தீட்டுங்கள்!
சிந்தனை.., முயற்சி, செயலாக்கம், விளம்பரம், மார்கட்டிங் எல்லாம் சரியாக இருக்கும் எந்த தொழிலும் வெற்றியில் மட்டுமே முடியும்… உங்களாலும் முடியும் !!
 எழுத்து : குமரன் கருப்பையா 
Contact 9841836528 to Advertise here